search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்"

    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவ லர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டும னைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகர ணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் குறித்தும், மாற்றுத்திற னாளிகளிடமிருந்து உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 332 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் தூய்மையாக இருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்வதுடன் தங்கள் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.6½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
    • பொது மக்களிடம் இருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.

    அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் அறிவு றுத்தினார். தொடர்ந்து 14 பயனாளி களுக்கு ரூ6.50லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிக ளையும், அதன் பயன்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கோட்டீஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • 99 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 99 மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோரின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 27 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கான காசோலைகள், வருவாய்த்துறை சார்பில் 2 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 5 பேருக்கு விதவை ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணை, 4 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் அம்ரித் வழங்கினார். கூட்டத்தில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சம்சுதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) மணிகண்டன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணைமேயர் ராஜு, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்களது பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுமார் 25 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தனர்.

    மாநகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் அளித்த மனுவில், ரஹ்மத் நகர் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது. எனவே மேயர் மாநகராட்சி சார்பில் வார்டில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து பின்னர் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 41- வது வார்டுக்கு உட்பட்ட இந்திராநகர், சோனியா நகர், காருண்யா நகர், மற்றும் பகுதிகளை உள்ளடக்கிய மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் அளித்த மனுவில் காருண்யா நகர்-பொன்விழா நகர் இணைப்பு சாலை அமைக்க வேண்டும். அந்த இடத்தில் புதிதாக தெரு விளக்கு ஒன்று அமைக்க வேண்டும். மாதம் ஒருமுறை மாஸ் கிளீனிங் நடத்த வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் காஞ்சிபுரம் வட்டம், பரந்தூர் மண்டலம் சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 நபர்களுக்கும், ஸ்ரீபெருமந்தூர் வட்டம் பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 276 மனுக்களை கொடுத்தனர்.
    • விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் சாலை வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 276 மனுக்களை கொடுத்தனர்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து ஊத்தங்கரை தாலுகா பெரியதள்ளப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகவேணி என்பவர் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நலையில் மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்து வருவதாகவும், மாதாந்திர உதவி தொகை பெற்று வந்த தனக்கு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தனக்கு மாதாந்திர உதவி தொகை வழங்க வேண்டும் என மனு கொடுத்தார்.

    அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையும், கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் காசோலையாக வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்
    • அரசு விதிகளுக்கு உட்பட்டு தீர்வுகள் எட்டப்படும்

    கன்னியாகுமரி :

    கல்லுக்கூட்டம் பேரூராட்சி 18-வது வார்டு பகுதியான கொட்டில்பாடு கிராமத்தின் ஒனாரிஸ் காலனி மற்றும் நவஜீவன் காலனி பகுதியில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பகுதி மக்களின் குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

    நிகழ்வில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மனோகர் சிங், செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் வார்டு கவுன்சிலர் முன்னிலையில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்.விரைவில் அரசு விதிகளுக்கு உட்பட்டு தீர்வுகள் எட்டப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மன்ற தலைவர் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் கொட்டில்பாடு பங்குதந்தை ராஜ், சமூக ஆர்வலர் குமார சுதன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    • கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்காற்றியவர் களுக்காக பசுமை முதன்மையாளர் விருது என்ற விருதை நிறுவி வழங்கி வருகிறது. இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாகவும் வழங்கப்படுகிறது.

    இதில் நீலகிரி மாவட்ட த்துக்கு 2 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுகுறித்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழி ற்சாலைகள் ஆகி யோரிடம் இருந்து பெறப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் கிளீன் குன்னூர் மற்றும் பகல்கோடு மந்து சூழல் மேம்பாடு குழு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021-ம் ஆண்டு பசுமை முதன்மையாளர் 2021 விருதிற்கு உரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    கிளீன் குன்னூர் நிறுவனத்துக்கான பசுமை சாதனையாளர் விருது சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது பெற்ற மற்றொரு நிறுவனமான பகல்கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழுக்கான விருதினை அக்குழுவின் தலைவர் மணிகண்டனுக்கு நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டீனாக பதவி ஏற்பவர் குறைந்தது ஒரு ஆண்டாவது பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் மனு அளித்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல் நேற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெய்லி அரங்கில் நடந்தது. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அப்போது ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு குமரி மாவட்டம் மட்டும் அல்லாது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். அப்படி இருக்க ஆஸ்பத்திரியில் போர்வை, தலையணை, மெத்தை, கட்டில் போன்ற உபகரணங்கள் மிகவும் பழமையானதாக உள்ளன.

    மேலும், 2017-ம் ஆண்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, மாதத்தில் ஏராளமானோர் இறப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளி வந்துள்ளது. கடந்த 25-12-2017 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் ஏ.சி. இயங்கவில்லை. அன்றைய தினம் மட்டும் 4 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், சிகிச்சைக்கு உள்நோயாளியாக சேர்க்கப்படுபவர்கள் குணம் அடையும் முன்பே நோயாளிகளிடம் கேட்காமலேயே ‘டிஸ்சார்ஜ்’ செய்கிறார்கள்.

    இந்த பிரச்சினைகளுக்கு காரணம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டீன் பதவிக்கு வருபவர்கள் பணி ஓய்வுபெறும் தருவாயில் நியமிக்கப்படுவதே ஆகும். இதனால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே டீனாக பதவி ஏற்பவர் குறைந்தது ஒரு ஆண்டாவது பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×